இலக்கியத்துறைக்கு அரும்பணியாற்றிய அமரர் அரியான் பொய்கை (கே.செல்லத்துரை) புலவரின் திருவுறுவச்சிலையின்...

"> Tamilmirror Online || அரியான் பொய்கை புலவரின் திருவுறுவச்சிலையின் திறந்து வைப்பு
அரியான் பொய்கை புலவரின் திருவுறுவச்சிலையின் திறந்து வைப்பு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ரஸீன் ரஸ்மின்


இலக்கியத்துறைக்கு அரும்பணியாற்றிய அமரர் அரியான் பொய்கை (கே.செல்லத்துரை) புலவரின் திருவுறுவச்சிலையின் திறப்பு விழா நிகழ்வு புதன்கிழமை (04) வைபவரீதியாக இடம்பெற்றது.


முள்ளியவளை அம்மன் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த திருவுறுவச் சிலையை, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் திறந்து வைத்தார்.


வரலாறு


வவுனியா மாவட்டத்திலுள்ள அரியமடு என்னும் கிராமத்தில் 1923.12.25 ஆம் திகதி கைலாயர்-வள்ளியம்மை தம்பதியருக்கு ஒரே மகனாகத் பிறந்த அரியாம் பொய்கை (செல்லத்துரை) புலவர், தனது கல்வியை முள்ளியவளை இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ( தற்போதைய முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்) பயின்றார்.


அவர் அஞ்சற் சேவையாளராக பணியாற்றி வந்ததுடன் கலை, இலக்கியங்களிலும் தனது பங்களிப்பினை நல்கினார்.
இளவயது முதல் கதாப்பிரசங்கம், புராணபடலம், சொற்பொழிவு, நாடகம், செய்யுல் இயற்றுதல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சிறந்து விளங்கினார்.


ஆத்துடன், கட்டுரைகள், வில்லிசை, பக்தி இசைப்பாடல்களை எழுவதில் அதிக ஈடுபாடு செலுத்தினார்.  'வேளம்படுத்த  வீராங்களை' என்னும் வராலாற்று நாட்டுக் கூத்து, முள்ளியவளை வேம்படி நாகபுஷணியம்மன் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


கவி சேகரன், கலாபுஷணம், தமிழ்மணி, பௌரணக்கலாநிதி, ஆளுநர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர், 2011.01.09ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.


இவரின் கலை, இலக்கிய, சமய சேவையினை பாரட்டி, அவரின் ஞாபகார்த்தமாக இச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


அரியான் பொய்கை புலவரின் திருவுறுவச்சிலையின் திறந்து வைப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.