ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் உடல்நலக் குறைவால் பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) ...

"> Tamilmirror Online || ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் பிரான்சில் காலமானார்
X

X
ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் பிரான்சில் காலமானார்

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் உடல்நலக் குறைவால் பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலமானார்.

1953ஆம் ஆண்டு நெடுந்தீவில் பிறந்த இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். நெடுந்தீவு மற்றும் மட்டக்களப்பில் கல்வி கற்றவர்.

மேலும், 1990ஆம் ஆண்டுகளில் பிரான்சில் குடியேறினார். அங்கிருந்து பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றினார். இவர் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார்.

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் புதினம் இணைய தளம் நிறுத்தப்பட்ட நிலையில், புதினப்பலகை என்ற செய்தி இணையத்தளத்தை உருவாக்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார்.

பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். கவிஞர் கி.பி அரவிந்தன், அப்பால் தமிழ் என்ற இணைய இதழையும் நடத்தி வந்தார்.

கடந்த 5 ஆண்டுகாலம் புற்றுநோயுடன் போராடிய வந்தநிலையிலே பிரான்சில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

 


ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் பிரான்சில் காலமானார்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.