இன்றைய பலன்கள் (26.01.2017)

இன்றைய பலன்கள் (26.01.2017)

மேடம்

யாரிடமும் யாரையும் மட்டம் தட்டிப் பேச வேண்டாம். தொண்டையில் புண் போன்றவை காணப்படும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.
அஸ்வினி: செலவு
பரணி: பாதிப்புகள்
கிருத்திகை 1ம் பாதம்: வெறுப்பு

இடபம்

குடும்ப இரகசியம் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது நல்லது. பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். செய்யும் தொழிலில் சேதம் உண்டாகும்.
கிருத்திகை 2,3,4: துன்பம்
ரோகிணி: கஷ்டம்
மிருகசீரிடம் 1,2: பகை

மிதுனம்

பணத் தேவைகள் அதிகமாக காணப்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.
மிருகசீரிடம் 2,3: பயம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம் 1,2,3: துக்கம்

கடகம்

கலைஞர்களுக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் புதிய வாகனத்தை வாங்குவார்கள். பணியில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
புனர்பூசம் 4: மகிழ்ச்சி
பூசம்: சாதனை
ஆயில்யம்: இன்பம்

சிம்மம்

நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. வேலை நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். வீணான வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மகம்: நஷ்டம்
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ம் பாதம்: துன்பம்

கன்னி

புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்திரம் 2,3,4: ஆர்வம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1,2ம் பாதம்: கவனம்

துலாம்

உறவினர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். தொழிலில் சுமாரான போக்கே காணப்படும். தொழில் இரகசியத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது.
சித்திரை 3,4ம் பாதம்: துன்பம்
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1,2,3: பிரச்சினை

விருட்சிகம்

நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். இல்லத்து சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதிகளில் புதிய கொள்வனவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: இலாபம்

தனுசு

மனப் பயம் நீங்கி, மனோபலம் உண்டாகும். தொழில் இரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மூலம்: பயம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1 ம் பாதம்: அலைச்சல்

மகரம்

எல்லா வேலைகளையும் குறித்த நேரத்துக்கு முடித்து, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசாங்கப் பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும்.
உத்திராடம் 2,3,4: இன்பம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1,2: மகிழ்ச்சி

கும்பம்

நிர்வாகப் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களிடம் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வேலை பார்ப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அவிட்டம் 3,4: அலைச்சல்
சதயம்: கஷ்டம்
பூரட்டாதி 1,2,3: துன்பம்

மீனம்

சுவையான சாப்பாடு கிடைக்கும். பெண்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: உதவி


இன்றைய பலன்கள் (26.01.2017)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.