2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (07.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (07.11.2011)

இன்று கர வருடம் ஐம்பசி மாதம் 21ஆம் நாள் (07.11.2011) திங்கட்கிழமை. சித்தயோகமும் துவாதசி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 12.36 மணிவரை பின்பு அனுஷம்.

ராகு காலம்: காலை 7.30 முதல் காலை 09.00 மணிவரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 04.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.

வளர்பிறை சுப முகூர்த்த தினம்


மேடம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும், முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
அஸ்வினி: துக்கம்
பரணி: வெறுப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு


இடபம்
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனதில் நிம்மதியின்மை ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: உபாதைகள்
ரோகிணி: சிக்கல்
மிருகசீரிடம் 1, 2: மனசங்கடம்


மிதுனம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், இன்பமான தூக்கம் கிடைக்கும்,  அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: மன அமைதி 
திருவாதிரை: சந்தோஷம்
புனர்பூசம்: தொடர்புகள்


கடகம்
கேட்;பார் பேச்சைக் கேட்டு நடப்பதால் துன்பம், பெண்களுடன் அனுசரித்து செயற்படவும், சரும நோய்கள் ஏற்பட்டு மறையும்.
புனர்பூசம்: சிரமம்
பூசம்: பகை
ஆயில்யம்: பொறுமை


சிம்மம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை தரும், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
மகம்: தோல்வி
பூரம்: கவலை
உத்திரம் 1ஆம் பாதம்: தொந்தரவுகள்


கன்னி; 
இறை பிரார்த்தனையின் பலனாக மகான்களின் தரிசனம் கிடைக்கும், பணவரவு ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
உத்திரம் 2, 3, 4: வெற்றி
அஸ்தம்: ஆசீர்வாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்


துலாம்
வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: அனுகூலம்
விசாகம் 1, 2, 3: ஆரோக்கியம்


விருட்சிகம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் மன அமைதி, பெண்களுடன் அனுசரித்து செயற்படவும், உடல் சோர்வுகள் ஏற்படும்.
விசாகம் 4: நாவடக்கம்
அனுசம்: வழிபாடு
கேட்டை: வெறுப்பு


தனுசு
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய முயற்சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மூலம்: அவதானம்
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தடுமாற்றம்


மகரம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனக் கவலைகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: பிரச்சினை
திருவோணம்: சிக்கல்
அவிட்டம் 1, 2: மேன்மை


கும்பம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல். 
அவிட்டம் 3, 4: புத்துணர்ச்சி
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3:வாய்ப்பு


மீனம்
ஆச்சரியமான பொருள் காணக்; கிடைக்கும், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடலாம்
பூரட்டாதி 4: குழப்பம்
உத்திரட்டாதி: விசித்திரம்
ரேவதி: இறை சிந்தனை

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .