இன்றைய பலன்கள் (27.04.2012)

இன்றைய பலன்கள் (27.04.2012)மேடம்
எந்த ஒரு விஷயத்திலும் நாட்டம் இருக்காது. உடல் நலனில் சிறிது அக்கறை காட்டுவது நல்லது. விளையாட்டுக்களில் ஈடுபடும் பொழுது அதிக அளவில் கவனம் தேவை.
அஸ்வினி: துன்பம்
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: துக்கம்


இடபம்
பணியிடத்தில் பணியாளர்களுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்வது அவசியம். தொழில் சம்மந்தமாக பிரயாணங்கள் உண்டாகும். வீணான அலைச்சல் மற்றும் உடலில் அசதி ஆகியவை காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம்
இல்லத்தில் திருடர்களினால் பயம் உண்டாகும். தொழில் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். 
மிருகசீரிடம் 2, 3: பயம் 
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: இலாபம்


கடகம்
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய தொழில்களுக்கான பேச்சுக்கள் நடைபெறும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி காணப்படும்.
புனர்பூசம்: பேட்டி
பூசம்: சாதனை
ஆயில்யம்: வெற்றி


சிம்மம்
தீயவர்களின் நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத விதமாக சில இழப்புக்கள் உண்டாகும். மனதை பாதிக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகள் உண்டாகும்.
மகம்: நஷ்டம்
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்


கன்னி 
பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும் இருந்த போதிலும் சமாளித்து விடுவீர்கள். தொழிலில் ஆர்வம் அதிக அளவில் காணப்படும். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
சில தவிர்க்க முடியாத செலவுகள் காணப்படும். மனம் சஞ்சலம் அடையும். அனாவசிய   பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: செலவுகள்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: பிரச்சினை


விருட்சிகம்
நல்ல நண்பர்களினால் வெளியில் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். மேலும் தொழிலிலும் அக்கறை செலுத்துவது நல்லது. மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: அலைச்சல்
கேட்டை: இன்பம்


தனுசு
பண விஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தொழில் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் சிறிது குறைபாடுகள் காணப்படும்.
மூலம்: பயம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்


மகரம்
செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் இலாபம் உண்;டாகும் மனம் மகிழ்ச்சியடையும்.
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: உதவி


கும்பம்
தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். செயல்களில சிறு சிறு தவறுகள் தோன்றும்.  முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும்; கவனம் அவசியம்.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: துக்கம்


மீனம்
பெண்களினால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இடமாற்றத்தினால் நல்லதொரு மனமாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: உதவி

இன்றைய பலன்கள் (27.04.2012)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.