2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்’

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக்கைதிகளை நேற்றையதினம் (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள  விடயம் வரவேற்கத்தக்கது என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

கோரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம், சகல நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலை அத்தியட்சகர் விடுத்த அறிவித்தல்களுக்கு அமைவாக, நீதிமன்றங்களின் ஆலோசனைகக்கமைய, சிறுகுற்றம் புரிந்த சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, முன்னாள் பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நீண்ட காலமாக எவ்வித விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தாலும் தமிழர் விடயத்திலும் கரிசனை கொள்ள வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அத்துடன், உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தாய், தந்தை, பிள்ளைகள் சிறையில் வாடும் போது, உறவினர்கள் இவ்வாறான கொடூரமான கொரோனா தொற்று மத்தியில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும், அவர்களது குடும்ப உறவினர்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்” என பிரபா கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலையை கவனத்தில் கொண்டு, நீண்ட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி இருக்கும் அரசியல் கைதிகள் உட்பட விசாரணைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இதனூடாக தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்ல முடியும் என்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .