2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒழுக்கத்தை மீறிய கோப் குழு உறுப்பினர்களுக்கு தண்டனை

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடலை முன்னெடுத்த கோப் குழுவின் உறுப்பினர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்“ என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று(28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வரலாற்றில் என்றுமில்லாதவாறு இடம்பெற்றுள்ள குறித்த பிணைமுறி மோசடி காரணமாக நாட்டின் பொருளாதாரம் மீளமுடியாத வீழ்ச்சிக்கு சென்றுள்ளதாகவும்,வட்டிவீதம் 100 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் ”அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக கடந்த 3 வருடங்களில் 1500-2000 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த நிலைமையினால் வட்டிவீதம் அதிகரித்துள்ளதுடன், வர்த்தகர்கள் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துக்கொள்ளுமளவிற்கு வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .