2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூலதனச் சந்தையும் முதலீடுகளும் நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடுகளின் நன்மைகள்

Editorial   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

1. தொழில்சார் நிதி முகாமைத்துவம்:  

நம்பிக்கை அலகுகளின் முதலீடு செய்த நிதியானது நிதி முகாமைத்துவக் கம்பனியால் தெரிவு செய்யப்பட்ட, தேர்ச்சி பெற்ற முதலீட்டு ஆலோசகர்களின் மேற்பார்வையின் கீழ், முறைமைப்படுத்தப்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதாவது, குறைந்த செலவில் பாதுகாப்பான வினைதிறனான முகாமைத்துவம்.  

2. பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுச் செயன்முறைகள்:  

முதலீட்டு நிதியமானது வேறுபட்ட துறைசார்ந்த கம்பனிகளின் பிணையங்களினால் முதலீடு செய்யப்படுவதனால் சிறு தொகை நிதியைக் கூட, இடர்களுக்கு எதிராகப் பரப்ப வசதியளிக்கின்றது. இதனால் இடர்களைக் குறைத்து இலாபத்தை உச்சப்படுத்த முடியும்.   

3. மிக குறைந்த முதலீட்டுத் தொகை:  

மிக குறைந்த முதலீட்டுத் தொகையான ரூபாய் 10.00 உடன் ஆரம்பிக்க முடியும். இருந்தும் சில நிதியங்களை வேறுபட்ட தொகையுடன் ஆரம்பிக்கலாம்.  

4. சுயாதீன நம்பிக்கை பொறுப்பாளரின் பாதுகாப்பு:  

பொது நிதியத்தின் பாதுகாப்பானது நம்பிக்கை பொறுப்பு வங்கியின் நம்பிக்கை உறுதிக்கமைவாக பூரண பாதுகாப்பை வழங்குகின்றது.  

5. இலகுத்தன்மை:

அலகுகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்தல்; மிக இலகுவானதும், எல்லோராலும் புரிந்து அலகுகளை விற்பனை செய்யும்போது, பெற்றுக்கொள்ள கூடிய மூலதன இலாபம் அல்லது நம்பிக்கை அலகுபொறுப்பாட்சியினால் வழங்கப்படுகின்ற பங்கு இலாபத்துக்கு எதுவித வருமான வரியும் அறவிடப்படுவதில்லை.  

6. மீள் முதலீடு வாய்ப்பு:

அலகுகளால் உழைக்கப்படும் பங்குலாபமானது அலகுகளாக விசேட விலையில் (கொள்வனவு விலையில்) மீள் முதலீடு செய்யும் முதலீட்டு வாய்ப்புகள்.  

7. திரவத்தன்மை:

அலகு முதலீட்டாளர்கள் அலகுகளை அதன் நிதியத்தின் சிறப்பில்புக்கு ஏற்ப, பணமாக மாற்றிக்கொள்ள முடிதல். அதாவது நிதி முகாமைத்துவக் கம்பனிகளிடம் கொடுத்து பணமாக மாற்றுதல் அல்லது இன்னொருவருக்குச் சன்மானமாகக் கொடுத்தல் அல்லது பங்குச் சந்தையில், சந்தை விலையில் கழிவு செய்து கொள்ள முடிதல் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.  

8. நெகிழ்ச்சித்தன்மை:

குறித்த நிதிமுகாமைத்துவ கம்பனிகளினால் பேணப்படும் வேறுபட்ட நிதியங்களுக்கிடையில் எமது அலகுகளை மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொண்டிருத்தல். உதாரணமாக, வருமான நிதியத்திலிருந்து வளர்ச்சி நிதியத்துக்கு மாற்ற முடிதல்.  

9. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் இணைந்து அலகுகளில் முதலீடு செய்ய வசதியளிக்கப்பட்டிருத்தல். அல்லது விரும்பினால் பின் உரித்தாளரை நியமிக்கும் உரிமையையும்  கொண்டுள்ளது.

- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .