2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 02.07.2018 - 06.07.2018

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

02.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 755 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்குகள் விற்பனையில் ஈடுபட்டனர்.  

03.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 566 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு காகில்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, டயலொக் அக்ஸியாடா மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

04.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 261 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் பங்களிப்பு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு,  கொமர்ஷல் வங்கி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

05.07.2018  

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 512 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

06.07.2018  

சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறை பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 753 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப், தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் DFCC வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு லங்கா ஐஓசி, சம்பத் வங்கி மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன 1.39% மற்றும் 1.93% சரிவை பதிவு செய்திருந்ததுடன், தினசரி சராசரிப் புரள்வு 570 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X