2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 03.12.2018 - 07.12.2018

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

03.12.2018  

கொமர்ஷல் வங்கி, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 445 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங், ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

04.12.2018  

மெல்ஸ்டாகோர்ப், கொமர்ஷல் வங்கி, பிரவுண் அன்ட் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 867 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

05.12.2018  

டயலொக் அக்ஸியாடா, டிஸ்டிலரீஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 614 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய, உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்ததுடன், ஹேலீஸ் ஃபெப்ரிக், ஒரியன்ட் பினான்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

06.12.2018  

LOLC ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செலான் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 533 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய, உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், அக்சஸ் என்ஜினியரிங், செலான் வங்கி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி, செலான் வங்கி (வாக்குரிமையற்ற பங்குகள்), ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

07.12.2018  

AIA இன்சூரன்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, நெஸ்லே லங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு சுட்டி, நேர் பெறுமதியையும் S&P SL20 மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 611 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய, உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, லயன் பிரெவரி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, செலான் வங்கி (வாக்குரிமையற்ற பங்குகள்) மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனிப் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு 0.83% உயர்வையும் S&P SL20 0.49% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 615 மில்லியன் ரூபாயாகப் பதிவாகி இருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .