2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 10.09.2018 - 14.09.2018

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

10.09.2018  

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 615 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அம்பியன் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

11.09.2018  

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் பிரவுண் அன்ட் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி.சு மறைப் பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

12.09.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, டிஸ்டிலரீஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 967 மில்லியனாக பதிவாகியிருந்தது. காகில்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.   

13.09.2018  

டுனாமிஸ் கெப்பிட்டல், டயலொக் அக்ஸியாடா மற்றும் DFCC வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் 
அ.ப.வி.சு நேர் பெறுமதியை பதிவு செய்திருந்ததுடன், S&P SL20 சுட்டி மறைப் பெறுமதியை பதிவு செய்திருந்தது. புரள்வு ரூ. 1.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. டுனாமிஸ் கெப்பிட்டல், சி ரி ஹோல்டிங்ஸ் மற்றும் காகில்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

14.09.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 786 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சிங்ஹபுத்ர ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 1.42% சரிவையும் S&P SL20 2.40% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 880 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .