2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

16.04.2018  

டிஸ்டிலரீஸ், சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் S&P SL20 மறைபெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 101 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, பெருமளவு இடம்பெற்றிருக்கவில்லை என்பதுடன், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, லங்கா ஐஓசி மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் சந்தை நடவடிக்கைகளில் பெருமளவு ஈடுபாட்டைக் காண்பிக்கவில்லை.  

17.04.2018  

டிஸ்டிலரீஸ், சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 315 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. அமானா டகாஃபுல், செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் டீஜே லங்கா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு, சந்தை நடவடிக்கையில் குறைந்தளவு பதிவாகியிருந்தது.  

18.04.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 188 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

19.04.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 269 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, யூனியன் வங்கி மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்ஸி லங்கா மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

20.04.2018  

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 418 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. செலிங்கோ இன்சூரன்ஸ் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, வட்டவளை பிளான்டேஷன்ஸ் மீது பதிவாகியிருந்ததுடன், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், ஹற்றன் பிளான்டேஷன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். 

வாரத்தில் அபவிசு 0.88% உயர்வையும் S&P SL20 சுட்டி 0.06% உயர்வையும் பதிவு செய்திருந்தன. தினசரி புரள்வு, சராசரியாக 259 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .