தனியாள் நிதி-திட்டமிடல்: நிகழ்கால, எதிர்கால நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கீகாரம்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

 

-மு. திலீபன்   

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, யாழ்ப்பாணம்   

 

 

நிதிதிட்டமிடல் மேலாண்மைக்கான சில திறவுகோல்கள்   

+உங்கள் குடும்பத்துக்குரிய பாதீட்டைத் தயாரித்து வருமானங்களை கண்காணித்தல்   

+வருமானத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறு தொகையைச் ​சேமிக்கும் மனப்பாங்​கை வளர்த்துக் கொள்ளல். இங்கு, எவ்வளவு விரைவாக எமக்காகச் சேமிக்க தொடங்குகின்றோமோ,  அந்த அளவுக்கு விரைவாக நாம் எமது நிதிக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கான சாத்தியம் அதிகமாகின்றது   

+ஆதனவரி, தனிப்பட்ட வரிகள் போன்ற கொடுப்பனவுகளுக்குப் பணத்தைப் பிரத்தியேகமாகப் பேணுதல் வேண்டும் . 

+வங்கி, நிதி நிறுவனத்திலிருந்து பெற்ற கடன்களை, உரிய நேரத்தில் செலுத்தி உங்களுடைய நம்பகத்தன்மையை உயர்வாகப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.  

+உங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக் கூடியவாறான காப்புறுதி உடன்படிக்கை எற்படுத்திக் கொள்வதுடன் அவற்றை காலத்துக்குக் காலம் மீளாய்வுக்கு உட்படுத்தல் வேண்டும். மருத்துவக் காப்புறுதியை (நீரிழிவு, புற்றுநோய்கள்) உள்ளடக்கிய ஆயுட்காப்புறுதி உடன்படிக்கையில் இருந்து ஆரம்பித்தல் மிகவும் சிறந்தது.   

+வாழ்க்கையின் வேறுபட்ட படிநிலைகளுக்கு நீண்டகால குறிக்கோள்களை வகுத்துக்கொள்ளுதல்,  பணிஓய்வுகாலத் திட்டத்​தை  ஆரம்பிப்பதற்கு இது மிக முந்தியது (Early) எனக் கொள்ள வேண்டியதில்லை   

படிமுறை மூன்று:   

நிதி குறிக்கோள்களை வகுத்துக் கொள்ளல்  

உங்களுடைய நிதி நிலைமைகள் தொடர்பில் நீங்கள் கொண்டுள்ள தெளிவான புரிந்துணர்வு அடிப்படையில் குறுங்கால, மத்தியகால, நீண்டகால நிதி குறிக்கோள்கள் உங்களால் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது. இவ்வாறான வேறுபட்டகால நிதி குறிக்கோள்கள், உங்களுடைய பாதீட்டை மீளாய்வு செய்ய, உங்களுடைய முதலீட்டு முதிர்வு காலத்தை வரையறுத்தல், பொருத்தமான தந்திரோபாய முதலீட்டுத் திட்டமிடல்களுக்கு உதவுகின்றன.

உங்களால் வகுக்கப்படும் குறிக்கோள்கள் தெளிவான, மதிப்பீடு செய்யக் கூடியது மட்டுமன்றி, குறிக்கோள்களின் போக்​கை, முன்னேற்றத்தை இலகுவாக மேற்பார்வை செய்யக் கூடியதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.   

குறிப்பாக, உங்களுடைய SMART நிதி இலக்குகள் பின்வரும் பண்புகளை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும்.   

குறிப்பாக, பின்வரும் ஏதோ ஒரு தேவையின் நிமிர்த்தம், அதாவது திருமணம் செய்வதற்கு, புதிய வீடு வாங்குவதற்கு, கல்வித் தகைமையை மேம்படுத்த உங்களுடைய சேமிப்பானது அதிகரிக்கப்படவேண்டும். உங்களுடைய சேமிப்பு இலக்குகளை அடைந்து கொள்வதற்கு மாதாந்தம் தொடர்ச்சியாக எவ்வளவு பணத்தை   சிக்கனப்படுத்த வேண்டும்? என்ன வட்டிவீதத்தில் எவ்வளவு காலத்துக்கு வைப்பில் இடவேண்டும்? என்பது தொடர்பாக பொருத்தமான கட்டளைகளைப் Excel Sheet ஐப் பயன்படுத்தி இலகுவாக, பிரத்தியேகமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.   

‘SMART’ நிதி குறிக்கோள்களுக்கு முன் உதாரணமாக, ஒருவர் இரண்டு வகையான குறிக்கோள்களைக் கொண்டு உள்ளதாக கொள்வோம். ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்தல் மற்றையது மற்றவர்களுக்கான போலியான கௌரவ செலவுகள்.

குறித்த நபர் ஒரு நாளுக்கு குறைந்தது மூன்று சிகரட் புகைக்கும் பழக்கம் கொண்டவர். அவருக்குரிய நாளாந்த செலவாக ரூ. 165 ஏற்படும். ஒரு வருடத்துக்கு மொத்தமாக ரூ. 54,750.00 புகைத்தலுக்கான மட்டும் செலவு செய்கின்றார். இச்செலவை அவர் தேசிய சேமிப்பு வங்கியில் 10% கூட்டு வட்டியில் தொடர்ச்சியாக 30 வருடங்களுக்கு ஒய்வூதியத்திட்டத்தில் வைப்புச் செய்வதாகக் கொண்டால். அவர் ரூ. 9 மில்லியன் தொகையான பணத்தை 30 வருடத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

குறிக்கோள்கள், முன்னுரிமை அடிப்படையில் அமைந்திருந்தால் வாழ்க்கையை வளப்படுத்தும்.   
நிதி குறிக்கோள்களை வகுத்துக் கொள்ளும் போது கவனிக்கப்பட வேண்டியவை.  

இங்கு மிகமுக்கியமாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது, ‘நீங்கள் எதைத் திட்டமிடுகின்றீங்கள்’ (What you are planning for). உங்களுடைய அனைத்துத் தேவைகள், குறிக்கோள்களை பட்டியற்படுத்துதல் வேண்டும். அவற்றை தொடர்ச்சியாக ஞாபகப்படுத்துவதுடன், உங்களின் மிக அவசியமான நாளாந்த செலவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் முக்கியமானது.   

நீங்கள் யதார்த்தமான குறிக்கோள்களை முன்னுரிமை அடிப்படையில் வகுத்துக்கொள்ளுதல் காத்திரமானது. உதாரணமாக, நீங்கள் மிக உயர்ந்த வட்டிவீதத்தில் அதாவது கடன்அட்டையைப் பயன்படுத்தி, தனிப்பட்ட கடன்பெற்றுள்ளீர்கள் எனக்கொண்டால், மற்றய நிதி (பொறுப்பு) குறிக்கோள்களைக் காட்டிலும் குறித்த இக்கடன் கொடுப்பனவுகளை முன்னுரிமை அடிப்படையில் கையாளுதல் வேண்டும்.

அதேவேளை, உங்களுடைய ஒவ்வொரு குறிக்கோள்களினதும் செலவுக்கட்டமைப்​பைக்  கோடிட்டுக்கொள்ளுதல்,  அச்செலவுகளுக்காக எவ்வளவு காலம் வரைக்கும் (Time horizon) நீங்கள் சேமிக்க, முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் கருதவேண்டும்.   

உங்களால் வகுத்துக்கொள்ளப்படும் நிதி குறிக்கோள்கள் யதார்த்தமானவையாக அமைந்திருத்தல் வேண்டும். நீங்கள் அதைக் காலத்துடன் இணைந்து மீளாய்வு செய்யும் போது, உங்களுடைய நிதி திட்டத்தை சீர்ப்படுத்துகின்ற போது, உங்களது இடர்நேர்வு மட்டத்தைக் கருத்தில் கொண்டு பயனுள்ள மாற்றங்களை உங்கள் நிதி திட்டங்களில் உள்ளடக்க முடியும்.   

(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)   

 


தனியாள் நிதி-திட்டமிடல்: நிகழ்கால, எதிர்கால நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கீகாரம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.