மூலதனச் சந்தையும் முதலீடுகளும் - பங்குச் சந்தை சுட்டிகள்

ங்கு சந்தையின் மொத்த பங்குகளின் விலை மட்டத்தை அளவிடும் கருவியே பங்குச் சந்தைச் சுட்டி எனப்படும். இங்கு சந்தை எனக் குறிப்பிடப்படுவது மொத்த சந்தையுமாகும்.  

மொத்த பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து கம்பனிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவரை கொழும்பு பங்குச் சந்தையில் 295 நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்கி, பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின், மொத்த சந்தை அமுலாக்கம் 2917 பில்லியனாக காணப்படுகின்றது.  

அனைத்து 295 கம்பனிகளையும் உள்ளடக்கியே அனைத்துப் பங்குகளின் விலைச்சுட்டெண் கணிப்பிடப்படுகின்றது. இலங்கைப் பங்குச் சந்தையின் விலைச்சட்டெண்ணானது பெறுமதி சார் திறையளித்த முறை மூலம் கணிப்பிடப்படுகின்றது.  

அனைத்து பங்குகளுக்கான விலைச்சுட்டெண் S&P Sri lanka 20  
அனைத்து பங்குகளுக்கான விலைச்சுட்டெண் (All Share Price Index) ASPI  

கொழும்பு பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள 295 கம்பனிகளும் விலைமட்டத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து பங்குகளுக்குமான விலைச்சுட்டெண் தயாரிக்கப்படுகின்றது.  

ASPI தயாரிக்கும் அனைத்து கம்பனிகளினதும் சந்தை மூலதனவாக்கம் உள்ளடக்கப்படுவதினால் இலங்கை பங்கு சந்தையின் முழுமையான விலைகள் தொடர்பாக உள்ள ஒரேயோர் அளவீடு இந்தச் சுட்டியாகும்.  
பங்குச் சந்தையின் உயர்ந்த வீழ்ச்சி, இதன் மூலமே அளவிடப்படுகின்றது. அன்றாடம் செய்திகளில் நீங்கள் பார்க்கலாம், அதாவது, கொழும்பு பங்குச் சந்தை 100 புள்ளிகளால் உயர்வடைந்திருந்தது. அல்லது 80 புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருந்தது என்று; இது அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண்ணின் மூலமே அடையப்படுகின்றது.  

1985 ஐ அடியாண்டாகவும் அடிப்படைச் சுட்டியாக 100 அடிப்படை புள்ளியாகவும் கொண்டு இச்சுட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 1985 ஜனவரி 2ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வியாபார தினமும் இச்சுட்டி கணிப்பிடப்படுகின்றது. இச்சுட்டியை கணிப்பிடும் முறை கீழே தரப்பட்டுள்ளது.  

ASPI = S&P Sri Lanka 20  

S&P Sri Lanka 20 சுட்டியானது சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட மிக முக்கியமான சுட்டியாகும். இச்சுட்டியில் தெரிவு செய்யப்பட்ட 20 அதிக சந்தை மூலதனத்தையும், அதிக திரவத்தன்மையும் மற்றும் சிறந்த நிதி நிலைமையும் கொண்ட சிறந்த கம்பனிகளை மட்டுமே உள்ளடக்கி கணிப்பிடப்படுகின்றது.  

சர்வதேச புகழ் பெற்ற Standard Poor நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற இந்தச்சுட்டி, 2012 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடியாண்டாக 2004ஆம் ஆண்டு அமைந்துள்ளதுடன், அடிப்படைச் சுட்டி, 100 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.  

S&P Sri Lanka 20 சுட்டியானது முன்னர் காணப்பட்ட மிலங்கா விலைச்சுட்டிக்கு பதிலாக அறிமுகப்படுத்ப்பட்ட ஒன்றாகும்.  அத்துடன் கொழும்பு பங்குச் சந்தையில் மேலும் இரண்டு முக்கியமாக சுட்டிகளும் காணப்படுகின்றன. அவையாவன:  

துறைசார் விலைச்சுட்டெண் (Sector Price Indices )  

பங்கு சந்தையில் 295 கம்பனிகளும் 20 துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைக்கும் அவை சார்ந்த விலைமட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதே துறைசார் சுட்டெண்ணாகும். இதன் மூலம் துறைசார் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிய முடியும்.  

மொத்த வருவாய் விலைச்சுட்டெண் (Total Return Index )  

2004 ஆம் ஆண்டு, மொத்த வருவாய் விலைச்சுட்டெண் இலங்கை பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக மூலதன இலாபம், பங்கிலாபம் ஆகியவை பிரதிபலிக்கப்படுகின்றன.  

பங்கு சந்தை சுட்டிகளின் முக்கியத்துவம்  

முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகின்றது.  

வியாபாரத்தின் போக்கை அறிய உதவுகின்றது.  

சிறந்த துறையை அறிய உதவுகின்றது.  

உலகளாவிய மட்டத்தில், இலங்கை பங்குச் சந்தையை ஒப்பீடு செய்வதற்கு உதவுகின்றது.  

வரலாற்று ரீதியான போக்கை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது.  

இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு  


மூலதனச் சந்தையும் முதலீடுகளும் - பங்குச் சந்தை சுட்டிகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.