வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 17.12.2018 -21.12.2018

17.12.2018

சிலோன் டொபாக்கோ கம்பனி, காசன் கம்பர்பட்ச் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், அ.ப.வி.சு நேர் பெறுமதியையும் S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 133 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   

18.12.2018   

டயலொக் அக்ஸியாடா, டிஸ்டிலரீஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 979 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கிப் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.   

19.12.2018   

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 3.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சொப்ட்லொஜிக் லைஃவ், சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, யூனியன் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி மற்றும் டீஜே லங்கா பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.

20.12.2018   

சிலோன் டொபாக்கோ கம்பனி, சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 3.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி, சம்பத் வங்கி மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. டயலொக் அக்ஸியாடா மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   

21.12.2018   

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், AIA இன்சூரன்ஸ் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 494 மில்லியனாக பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.   

வாரத்தில் அபவிசு 0.94% சரிவையும் S&P SL20 1.31% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.7 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.  


வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 17.12.2018 -21.12.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.