வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 22.01.2018 - 26.01.2018

22.01.2018  

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 460 மில்லயனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

23.01.2018  

சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ், லயன் பிரெவரி மற்றும் சிலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப்பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சணச அபிவிருத்தி வங்கி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஆசிரி சேர்ஜிகல் ஹொஸ்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

24.01.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, சம்பத் வங்கி மற்றும் பிராக் லங்கா ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 453 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. காகில்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

25.01.2018  

டயலொக் அக்ஸியாடா, காகில்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லயன் பிரெவரி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

26.01.2018  

டயலொக் அக்ஸியாடா, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 264 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ரேணுகா ஹோல்டிங்ஸ் மற்றும் சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு குறைந்தளவில் காணப்பட்டதுடன், பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.19% மற்றும் 0.39% அதிகரிப்பை பதிவு செய்ததுடன், சராசரி தினசரி புரள்வு 801 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 22.01.2018 - 26.01.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.