வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 23.07.2018 - 26.07.2018

23.07.2018 

சிலோன் டொபாக்கோ கம்பனி, டிஸ்டிலரீஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 238 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர். 

24.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் ஃபினான்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு 
ரூ. 273 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

25.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 161 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, லயன் பிரெவரி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டிஸ்டிலரீஸ் மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர். 

26.07.2018 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 430 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில், அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன 0.60% மற்றும் 1.18% சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 276 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. 

27.07.2018  

எசல போயா விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. 


வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 23.07.2018 - 26.07.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.