வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 25.06.2018 - 29.06.2018

25.06.2018

ஹற்றன் நஷனல் வங்கி, டிஸ்டிலரீஸ் மற்றும் காசன் கம்பர்பெட்ச் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 176 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  
26.06.2018 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 541 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது, கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

27.06.2018  

பொசன் பௌர்ணமி அரச, வங்கி விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.  

28.06.2018  

காகில்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.2 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, மெல்ஸ்டாகோர்ப் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது, கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

29.06.2018  

டிஸ்டிலரீஸ், காகில்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 946 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் கோல்ட்  ஸ்டோர்ஸ், கொமர்ஷல் வங்கி, பிம்புத் ஃபினான்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன 0.54% மற்றும் 1.14% சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 736 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 25.06.2018 - 29.06.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.