வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 04.03.2019 - 08.03.2019

04.03.2019  

சிவராத்திரி பொது, வங்கி விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. 

05.03.2019  

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் நேர்ப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.1 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி, சம்பத் வங்கி மற்றும் டீஜே லங்கா பங்குகள் மீதுப் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

06.03.2019   

கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், பிரவுண் அன்ட் கம்பனி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 385 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள், பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

07.03.2019  

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், செலான் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு, ரூ. 637 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

08.03.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, மெல்ஸ்டாகோர்ப் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு, ரூ. 2.0 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, மெல்ஸ்டாகோர்ப், செலிங்கோ இன்சூரன்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, தேசிய அபிவிருத்தி வங்கி, ரோயல் செரமிக்ஸ், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதுப் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு 0.56% சரிவையும் S&P SL20 0.29% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 1.0 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 04.03.2019 - 08.03.2019

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.