வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 09.07.2018 - 13.07.2018

09.07.2018  

மெல்ஸ்டாகோர்ப், டிஸ்டிலரீஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 154 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, டிஎவ்சிசி வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

10.07.2018  

அபவிசு மாற்றமின்றியும், S&P SL20 நேர் பெறுமதியுடனும் நிறைவடைந்திருந்தன. புரள்வு ரூ. 142 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சணச அபிவிருத்தி வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்குக் கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

11.07.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் வங்கி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள், நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 461 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கிப் பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சுவிஸ்டெக் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

12.07.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள், நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 586 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அம்பியன் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   
13.07.2018  

லயன் பிரெவரி, பிராக் லங்கா ஃபினான்ஸ் மற்றும் பிரவுண்ஸ் கெப்பிட்டல் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும், S&P SL20 சுட்டி மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 626 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜெட்விங் சிம்பொனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹன்டர்ஸ் அன்ட் கம்பனி, சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட் மற்றும் பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன, 0.48% மற்றும் 0.34% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததுடன், தினசரி சராசரிப் புரள்வு 394 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 09.07.2018 - 13.07.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.