வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 11.06.2018 - 16.06.2018

11.06.2018  

டிஸ்டிலரீஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறை பெறுமதியைப் பதிவு செய்திருந்தது. S&P SL20 சுட்டி நேர் பெறுமதியைப் பதிவு செய்திருந்தது. புரள்வு ரூ. 393 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த, நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, டயலொக் அக்ஸியாடா, சணச அபிவிருத்தி வங்கி, ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, HNB அசூரன்ஸ் பங்கு மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

12.06.2018  

டயலொக் அக்ஸியாடா, கொமர்ஷல் லீசீங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 876 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, மெல்ஸ்டாகோர்ப், ஹற்றன் நஷனல் வங்கி, சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லயன் பிரெவரி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, லங்கா ஐஓசி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

13.06.2018  

டிஸ்டிலரீஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் பிராக் லங்கா ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 459 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

14.06.2018  

டயலொக் அக்ஸியாடா, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் லயன் பிரெவரி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 273 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ரேணுகா அக்ரி ஃபுட்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, டோக்கியோ சீமெந்து கம்பனி மற்றும் செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன 0.37% சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 501 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.  

15.06.2018  

ரமழான் பெருநாள் அரச, வங்கி விடுமுறை காரணமாகக் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.    


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 11.06.2018 - 16.06.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.