வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 12.11.2018 - 16.11.2018

12.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் பிரவுண் அன்ட் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 424 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

13.11.2018  

ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 6.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஒடெல், சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ் மற்றும் டீஜே லங்கா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொடுக்கல் வாங்கல்களில் பெருமளவு ஈடுபாட்டை காண்பிக்கவில்லை.  

14.11.2018  

டயலொக் அக்ஸியாடா, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 729 மில்லியனாக பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் டீஜே லங்கா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் செலான் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

15.11.2018  

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, மெல்ஸ்டாகோர்ப் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 135 மில்லியனாக பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு காகில்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

16.11.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும் S&P SL20 சுட்டி நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 346 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி, சம்பத் வங்கி மற்றும் ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.39% சரிவையும் S&P SL20 0.49% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.7 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.  


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 12.11.2018 - 16.11.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.