வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018

21.05.2018  

பிராக் லங்கா ஃபினான்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு 
ரூ. 524 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

22.05.2018  

டயலொக் அக்ஸியாடா, AIA இன்சூரன்ஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் S&P SL20 மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங், டீஜே லங்கா, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், HNB அசூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

23.05.2018  

நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 249 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டீஜே லங்கா மற்றும் டிஸ்டிலரீஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

24.05.2018  

டிஸ்டிலரீஸ், லயன் பிரெவரி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 652 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. R I L புரொப்பர்டி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, எயிட்கன் ஸ்பென்ஸ் மீது பதிவாகியிருந்தது. பிரவுண்ஸ் கெப்பிடல் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

25.05.2018  

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி, ஏசிஎல் கேபிள்ஸ், மெல்ஸ்டாகோர்ப், அமானா டகாஃபுல் லைஃவ், டீஜே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சிங்கபுத்ர ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.37% மற்றும் 0.22% சரிவைப் பதிவு செய்திருந்தன. தினசரி சராசரிப் புரள்வு ரூ. 525 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.    


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.