2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் இலங்கை சந்தையையும் ஆக்கிரமிக்குமாம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமேசன் மற்றும் ஐடியுன்ஸ் போன்ற பாடல் இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் ஸ்ரோர்களின் அறிமுகத்தின் மூலம் உயர் செலவான சிடிக்களின் விற்பனை வீழ்ச்சியடையத்தொடங்கியது. இது மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்புக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் சந்தையை ஆக்கிரமிப்பதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கையில் செயற்பட்டு வரும் அமெரிக்காவின் சிலிக்கன் வெலியை தளமாக கொண்டு இயங்கும் லீப்செட் அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறையில் மாற்றத்துக்கு வழிகோலும் வகையில் அமைந்த கண்டுபிடிப்புகளுக்கான வரவேற்பு சிறந்த முறையில் இலங்கையில் காணப்படுவதாகவும், இது குறித்து தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைசார் முன்னணி வல்லுநர்களுடன் தமிழ்மிரர் வணிக பிரிவு தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் கருத்தை கேட்டபோது, அவர்களின் பார்வையில் இந்த மாற்றம் குறித்த கருத்துகள் பின்வருமாறு அமைந்திருந்தன.



SLASSCOM அமைப்பின் தலைவரும் நிறைவேற்று உப தலைவரும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவருமான சுஜீவ தேவராஜா கருத்து தெரிவிக்கையில், 'மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்பு என்பது வாடிக்கையாளர்களின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்க வேண்டும் அல்லது அவர்கள் எதிர்பார்க்காதவிதமாக ஏற்கனவே காணப்படும் ஒரு தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்த தீர்வுக்கு நுட்பமான மாற்றீடாக அமைய வேண்டும் என்பதாகும். இதன் காரணமாக முற்றிலும் புதிய சந்தை வாய்ப்புகள், பிரிவுகள் போன்றன உருவாகி, காலப்போக்கில் தற்போதைய சந்தைப்போக்கை மாற்றியமைக்கும் வகையில் அமையும்' என்றார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடத்தின் பேராசிரியரான கிஹான் டயஸ் கருத்து தெரிவிக்கையில், 'தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு சிறந்த உதாரணமாக நாம் டிஜிட்டல் புகைப்படபிடிப்பு கலை எவ்வாறு ஃபிலிம் ரோல் முறையிலான புகைப்படப்பிடிப்பு கருவிகளை மாற்றீடு செய்திருந்தமையை குறிப்பிடலாம். இலங்கை இதுபோன்ற மாற்றங்களை எதிர்கொள்ள தயாராகவுள்ளது. குறுகிய காலப்பகுதியில் 12 மில்லியன் இலங்கையர்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளமையானது எவ்வளவு விரைவாக மக்கள் புதிய சிந்தனைகளின் வெளிப்பாடுகளாக அமையும் கண்டுபிடிப்புகளுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்' என்றார்.

ICTA அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவபுர கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தக கட்டமைப்பு கண்டுபிடிப்பு என்பது வர்த்தக முறையில் முற்றிலும் மாறுபட்ட வர்த்தக கட்டமைப்பை தோற்றுவிக்கக்கூடிய ஒரு முறையாக அமைந்துள்ளது. உதாரணமாக பங்களாதேஷை பொறுத்தமட்டில் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வர்த்தக செயற்பாடுகளை சைக்கிளோட்டிகள் மேற்கொண்டிருந்ததை நினைவுகூற விரும்புகிறேன்' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இன்று இலங்கையை பொறுத்தமட்டில் பெருமளவான அரச சேவைகளை eSri Lanka செயற்றிட்டத்தின் மூலமும் அரச தகவல் சேவை நிலையத்தின் (1919) மூலமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய அல்லது அறிந்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. இது இலங்கையில் மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்பு நடவடிக்கைக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அரசதுறையுடன் தொடர்புடைய சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இந்த சேவை நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்' என்றார்.

லீப்செட் நிறுவனத்தின் இலங்கை காரியாலயத்தின் பங்காளராக செயற்படும் ஷனில் பெர்ணான்டோ கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை வாடிக்கையாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் அமைந்த பொருட்களுக்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள தயாராகவுள்ளனர். இது இலங்கையை உலகளாவிய ரீதியில் சிறந்த இடத்துக் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு பிரதான காரணம், இலங்கை ஓரங்கட்டப்பட்ட ஒரு நாடு அல்ல. நாட்டில் காணப்படும் இணைய வசதிகள் இலங்கையர்களை உலகின் அனைத்து பாகங்களுடனும் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்தி உலக நடப்புகள் குறித்து விரைவாக அறிந்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றமையை குறிப்பிடலாம். BPO துறையை பொறுத்தமட்டில் இலங்கையில் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. பாரம்பரிய BPO சேவைகளை வழங்கும் முறையிலிருந்து இலங்கை மாற்றம் கண்டு வருகிறது. எனவே பெருமளவான நிறுவனங்கள் இந்த மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது' என்றார்.

கலிபோர்னியாவின் சிலிக்கன் வெலி பகுதியை தளமாக கொண்டு இயங்கும் லீப்செட் நிறுவனம், இலங்கையில் அண்மையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. சிலிக்கன் வெலி பகுதியில் முன்னெடுக்கப்படும் மென்பொருள் கட்டமைப்பு நடவடிக்கைகளின் பாணியில் இலங்கையிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க லீப்செட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .