2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நலிவடைந்து செல்லும் உள்நாட்டு விவசாயத்துறை

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.சேகர்
 
இலங்கையின் வரலாற்றில் ”கிழக்கின் உணவு களஞ்சியசாலை” என அழைக்கப்பட்டது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமை மாறி, வெளிநாட்டு உணவுகளை கொண்டு வந்து கொட்டும் ஒரு நாடாக மாற்றமடைந்துள்ளது. 
 
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் விவசாய உற்பத்திகளுக்கு புகழ்பெற்றுத்திகழ்ந்தது. அக்காலகட்டத்தில் நாட்டின் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டும் விவசாய உற்பத்திகளாக தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் போன்றன திகழ்ந்தன. இதைப்போலவே, நாட்டின் அரிசி, மீன்பிடி மற்றும் உலர் உற்பத்திகள் போன்றன தேசிய கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது.

 
கடந்த ஆண்டில் இலங்கை மொத்தமாக 380,968 மில்லியன் ரூபாவை நுகர்வோர் பாவனைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவிட்டிருந்தது. இதில் உணவு மற்றும் பான வகைகள் மட்டும் 40 வீதமான பகுதியை தன்னகத்தே கொண்டுள்ளது (166,003 மில்லியன் ரூபா). இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களில் உள்நாட்டு தேயிலையுடன் கலந்து பெறுமதி சேர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையும் உள்ளடங்குகிறது. உள்நாட்டு இறப்பர் தொழிற்துறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இறப்பர் இறக்குமதியும் மேற்கொள்ளப்படுகிறது. 2.5 பில்லியன் ரூபா பெறுமதியான எண்ணெய் மற்றும் கொழுப்புகளையும் இலங்கை இறக்குமதி செய்துள்ளது.
 
இறக்குமதி செய்யப்படும் அனைத்துவிதமான எண்ணெய் வகைகளும் மரக்கறி எண்ணெய் என தரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொலஸ்ரோல் அற்றது எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உடலுக்கு தீங்கானது எனும் போர்வையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

 
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் விவசாயத்துறை என்பது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 வீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆனாலும் தற்போது இந்த எண்ணிக்கை 12 வீதமாக குறைவடைந்துள்ளது. பொருளாதார ஆய்வாளர்களின் கருத்துப்படி, உற்பத்தி மற்றும் சேவைகள் துறை வளர்ச்சியடைவது, நாட்டின் அபிவிருத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். எனவே இது வரவேற்கத்தகுந்த விடயமாகும். ஆனாலும் உண்மையில் இந்த நிலமையானது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு மாத்திரமே பொருத்தமானதாக அமையும். 
 
ஆனாலும், அபிவிருத்தியடைந்த நாடுகள் விவசாயத்துறையை கைவிடவில்லை. ஏனைய துறைகளை அபிவிருத்தி செய்ததை போலவே, விவசாயத்துறையின் அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துகின்றன. உற்பத்தி மற்றும் விவசாயத்துறையானது அதிகளவு வேகமாக வளர்ச்சியடைகிறது. ஏனெனில் இவற்றுக்கு அபிவிருத்தியடைவதற்கான வேகம் அதிகமாகும்.
 
காலாகாலம் நாட்டில் விவசாயத்துறையை முன்னேற்றுவது தொடர்பாக வெவ்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன. விவசாயத்துறையுடன் தொடர்புடைய அமைச்சுகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக பீடங்களும் அமைந்துள்ளன. விவசாய திணைக்களங்கள் மற்றும் ஏனைய மேற்பார்வை அமைப்புகள் ஆகியனவும் இயங்கிய வண்ணமுள்ளன. குறிப்பாக பெரும்போக செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் சில அமைப்புகள் இயங்கி வருகின்ற போதிலும், அவை விவசாயிகளின் நலனில் எவ்வளவு தூரம் அக்கறை செலுத்துகின்றன என்பது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. 
 
இந்த அமைப்புகளின் மூலமாக விவசாயத்துறையை மீண்டும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பல தீர்வுகள் பிரேரிக்கப்பட்ட போதிலும், அவை எந்த வகையில் புரட்சிகரமானதாக அமைந்திருக்க வேண்டும் என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. அதாவது சிலர் பாரம்பரிய விவசாய உற்பத்தி முறைகளை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தமைவை கொண்டுள்ளனர். 
 
நவீன காலகட்டத்தில் இந்த பாரம்பரிய விவசாய முறைகள் ஏற்புடையனவாக காணப்படவில்லை. இந்த பாரம்பரிய விவசாய முறையின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் சூழல் பாதுகாப்பு சார்ந்த அனுகூலங்கள் பல காணப்பட்ட போதிலும், இளைஞர்களை இந்த துறை கவர்ந்ததாக காணப்படவில்லை. தற்கால கட்டத்தில் இந்த தொழிலை மேற்கொள்வோருக்கு சமூதாயத்தில் எவ்விதமான கௌரவமும் கிடையாது என்பதால், இந்த தொழிலை எவரும் தமது ஜீவனோபாயத்தொழிலாக முன்னெடுக்க பெரிதும் முன்வருவதில்லை. 
 
இந்த நிலை மாறி, விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி, நவீன தொழில்நுட்ப முறைகளை விவசாயத்துறையில் உள்வாங்கி, பசளைகள் முதல் உழுவதற்கு பயன்படுத்தப்படும் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் உடல்நலத்துக்கு ஆரோக்கியமான உள்நாட்டு தயாரிப்புகளை உண்ண பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், வெளிநாட்டு பாணியில் இலங்கையிலும் பெருகி வரும் சிற்றுண்டிச் சாலை உணவு பழக்க முறையிலிருந்துவிடுபட முடியும். ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பவும் முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X