2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இவ்வார பங்குச்சந்தை நிலைவரம் 02.09.2019 - 06.09.2019

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

02.09.2019

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நெஷனல் வங்கி, ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 559 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி, பான்ஏசியன் பவர், லயன் பிரெவரி மற்றும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

03.09.2019

அஸ்கொட் ஹோல்டிங்ஸ், காகில்ஸ் மற்றும் ஏசியன் ஹோட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 799 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு: சம்பத் வங்கி, டோக்கியோ சீமெந்து கம்பனி, பான் ஏசியன் பவர் மற்றும் வலிபல் பவர் எரத்னா ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு: பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

04.09.2019

சிலோன் டொபாக்கோ கம்பனி, LOLC ஹோல்டிங்ஸ் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவுசெய்தன. புரள்வு: ரூ. 720 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு: சம்பத் வங்கி, லயன் பிரெவரி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு: பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் ஹேலீஸ் ஃபப்ரிக் பங்குகள் மீது பதிவாகியிருந்ததுடன், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு: அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது.வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

05.09.2019

சிலோன் டொபாக்கோ கம்பனி, சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு: ரூ. 518 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் கொமர்ஷல் வங்கிப் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு: பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு: ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

06.09.2019

செலான் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. 
புரள்வு: ரூ. 631 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு: லயன் பிரெவரி, சம்பத் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு: பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

வாரத்தில் அபவிசு 1.55% சரிவையும் S&P SL20 3.12% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 646 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .