2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனியாள் நிதி திட்டமிடல்

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுடைய நிகழ்கால,  எதிர்கால நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்

மு.திலீபன்   
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை,  யாழ்ப்பாணம்    

(சென்ற வாரத் தொடர்ச்சி)

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும்  

குழந்தைகள்  

வாழ்க்கையில் குழந்தைகளுக்கான சிறந்த தந்தையாக இருத்தல்; மிகப்பெரிய பாக்கியம், சந்தோஷம் ஆகும். அதேவேளை நீங்கள் உங்கள் குழந்தைகளின் பாதுகாவலனாகப் பரிமாணம் அடைகின்றபோது, பல புதிய, நீண்டகால நிதிப் பொறுப்பு களை உள்வாங்கி நிதித்திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும்.  

நிதி முன்னுரிமைகள்   

குழந்தைப் பிரசவத்துக்கு முன்னரும் பின்னரும் ஆக, மிகவும் அத்தியாவசியமான தேவைகள், முன்னுரிமை அடிப்படையில் உங்களுடைய குடும்பப் பாதீடானது மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். அதேசமயம், எதிர்பாராத நிகழ்வுகளான சத்திரசிகிச்சை, இரட்டைப்பிரசவம், குழந்தை சுகநலச்செலவு போன்றவற்றுக்கான பிரத்தியேக ஒதுக்கத்​ைத, குழந்தையின் எதிர்காலக் கல்விக்கானத் திட்டம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிறைகளை வழங்கித் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.   

குடும்ப நிதித்திட்டமிடல் அடிப்படைகள்  

உங்கள் குழந்தைகளுக்கான புதிய செலவீனங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதுடன் அவற்றுக்கான உங்கள் வருமானப் பங்களிப்புகளையும் உள்ளடக்கிய புதிய பாதீட்டைத் தயாரித்தல் வேண்டும்.   உங்கள் குடும்பத்தின் நீண்டகால நன்மைகளை உறுதிப்படுத்தக் கூடியவாறான திட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கெனவே நிதித் திட்டத்​ைதப் பின்பற்றுபவராக இருந்தால், பின்வரும் விடயங்களில் மிகவும் அவதானமாகக் கருத்தில் கொண்டு, உங்கள் திட்டத்தை மீளாய்வு செய்தல் வேண்டும்.  

உங்களுக்குப் பெரிய வீடு தேவையா? நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால், சொந்த வீட்டுக்குச் செல்வது தொடர்பாக எதாவது நிதித் திட்டத் தயார்படுத்தல்களில் ஈடுபடுகின்றீர்களா? குழந்தைகளின் பாடசாலைக்கு அருகாமையில் அமைவதை விரும்புகின்றீர்களா?  

வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கப் போதுமானதும் பொருத்தமானதுமான காப்புறுதி உடன்படிக்கை​ைய  உறுதிப்படுத்தல், மீளாய்வு செய்தல்.   

உங்களுடைய வீட்டுவேலைப் பழுவைப் பகிர்ந்து செய்ய, நிச்சயமாக ஒரு பணிப்பெண் தேவையா? எமது பிள்ளைகளைப் பராமரிக்க, மனைவி தொழிலுக்குச் செல்வதை நிறுத்த வேண்டிய தேவை உண்டா? அவ்வாறு நீங்கள் சிந்திக்கின்றீர்களா?   

குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்குத் தேவையான போதுமான அளவு பணம் உங்களிடம் உண்டா? இன்று கல்வியானது, ஒரு வியாபாரமாகமாறி பாரிய செலவாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் அமைந்துள்ளது. உங்களுடைய சேமிப்புகள், முதலீட்டுத் திட்டங்கள் இவ்வாறான நிதிச்சுமையை சுமக்கத்தக்கதாக அமைந்துள்ளனவா?  

(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .