2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நம்பிக்கை அலகுபொறுப்பாட்சி

Editorial   / 2018 ஜனவரி 24 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலீட்டாளர்களிடமிருந்து ஒன்று திரட்டப்படும் நிதியைக் கொண்டு உருவாக்கப்படும் முதலீட்டு நிதியம், ‘நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி’ (Unit Trust) எனப்படும். நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியின் நிதியானது, முதலீட்டாளர் அலகுகளை (Units) விற்பனை செய்வதன் ஊடாகத் திரட்டப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் நிதியைப் பல்வேறுபட்ட முதலீட்டுத் தேக்கங்களில் முதலீடு செய்வதன் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை அலகு உடைமையாளர்களின் முகாமைத்துவ கம்பனியானது பகிர்ந்து வழங்கும்.  

நம்பிக்கை அலகு பொறுப்பாட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் முறைமைப்படுத்தப்படுகின்றன.நேரடியாகப் பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யக்கூடிய அலகுப்பொறுப்பாட்சிகளில் முதலீடு செய்ய வேண்டும்  
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முழுமையான அறிவும் அனுபவமும் இன்றியமையாதது. 

அவ்வாறில்லாமல் முதலீடு செய்யும்போது, அது பாதகத்தில் முடிவடையலாம். அவ்வாறானவர்கள் நம்பிக்கை அலகுகளில் முதலில் முதலீடு செய்யும் போது, முதலீடு செய்யும் முறைகளையும் அனுபவத்தையும் குறைந்த முதலீட்டின் மூலம் பெறலாம்.  

அத்துடன் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் அலகுகளை விற்பனை செய்வதன் ஊடாக திரட்டப்பட்ட மூலதனம் அல்லது நிதியானது தொழில்சார் தகைமையை முகாமைத்துவ கம்பனியினால் முதலீடு செய்யப்படுகின்றது. இம்முகாமைத்துவ கம்பனியானது முதலீடு சம்பந்தமாகப் பரந்துபட்ட அறிவும் அனுபவமும் கொண்டவைகளாகும். அவர்கள் அந்த நேரத்தில் காணப்படும் அனைத்து முதலீட்டுத் தெரிவுகளையும் ஆராய்ந்து, அதில் மிகச் சிறந்த ஒன்றை தெரிவு செய்து முதலீடு செய்வார்கள்.  


நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் பங்குபற்றும் நிறுவனங்கள் யாவை?  

நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் நிதி முகாமைத்துவ கம்பனி (Trust Fund Management Company) நம்பிக்கைப் பொறுப்பாளர் (Trustee) அத்தோடு அலகுகளின் உரிமையாளர்களாகிய அலகுடையாளர்கள் (Unit Holders)  

நிதி முகாமைத்துவ கம்பனியின் செயற்பாடுகள் என்ன?  

நிதி முகாமைத்துவ கம்பனியே நம்பிக்கை பொறுப்பாட்சியில் மிக மிக முக்கியமான வகிபாகத்தை கொண்டுள்ளது. முதலாவதாக அது நிதி முகாமைத்துவ கம்பனியாக செயற்பட இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் பதிவு செய்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும்.  

அனுமதிப்பத்திரம் கிடைத்ததும் அலகுகளில் முதலீடு செய்யக் கூடிய முதலீட்டாளர்களைத் தேடும் பணியில் ஈடுபடும் அல்லது மக்கள் மத்தியில் நம்பிக்கை அலகுகளை விளம்பரப்படுத்தும்.  

இரண்டாவதாக நிதி முகாமைத்துவ கம்பனி, அலகு விற்பனை மூலம் கிடைத்த முதலீடுகளைப் பேணச் சிறந்த முதலீட்டுத் தேக்கமொன்றைத் தெரிவு செய்யும்.  

மூன்றாவதாக அலகுடைமையாளர்களைப் பதிவு செய்தலும் கணக்குகளை பராமரித்தலும்.  

நிதி முகாமைத்துவக் கம்பனியை யார் ஆரம்பிக்கலாம்?  

நிதி முகாமைத்துவக் கம்பனியை ஆரம்பிக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட ஆகக்குறைந்த மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் தேவையான தகைமை மற்றும் அனுபவம் கொண்ட போதியளவான ஆளணியையும் கொண்டிருக்க வேண்டும்.  

நம்பிக்கைப்பொறுப்பாளர் (Trustee) எனப்படுபவர் யார், அவர்களது தொழிற்பாடுகள் என்ன?  

நம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருவர் சிறந்த நன்மதிப்புடன், சுயமாகச் செயற்பட கூடிய நிதி நிறுவனமொன்றாகும்.  

நம்பிக்கைப் பொறுப்பாட்சியில் நம்பிக்கைப் பொறுப்பாளர் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். 

நம்பிக்கைப் பொறுப்பாளரின் மிக முக்கியமான பொறுப்பாகக் காணப்படுவது முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும். மேற்குறிப்பிட்ட நோக்கத்தை அடைய நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சிகளின் சொத்துகளின் பொறுப்பானது நம்பிக்கை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை அனைத்து முதலீடுகளும் நிதி முகாமைத்துவ கம்பனியினால் நம்பிக்கைப் பொறுப்பாளரின் பெயரில் மேற்கொள்ளப்படுகின்றது.  

அதாவது, நிதி முகாமைத்துவ கம்பனியானது அலகு உடைமையாளர்களிடமிருந்து திரட்டிய அனைத்து முதலீடுகளையும் நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே கூறியவாறு நிதி முகாமைத்துவ கம்பனியானது முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொண்டு, அதனை நம்பிக்கைப் பொறுப்பாட்சிக்கு தெரியப்படுத்தும் நம்பிக்கைப் பொறுப்பாளர் அவ்வாறான முதலீட்டுத் தீர்மானங்கள் நிதியத்தின் குறிக்கோள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு இசைவாகக் காணப்பட்டால் மாத்திரமே அம்முதலீடுகளுக்கு நிதியை வழங்குவர். இதன் மூலம் நம்பிக்கைப் பொறுப்பாளர் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை பெற்றுக்கொண்ட நோக்கத்தை நிவர்த்தி செய்வார்.  

நம்பிக்கைப் பொறுப்பாட்சி எனது தேவைகளை பூர்த்தி செய்யுமா?  

முதலீட்டாளர்களது தேவைகள் மட்டுமல்லாது ஒருவர் தனது முதலீட்டுக்கு நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பார். மற்றவர் நிலையான வருமானம் இல்லாமல் தனது முதலீட்டின் பெறுமதி அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அத்தோடு மூன்றாமவர் தனது முதலீட்டுக்குத் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும் அதேவேளை, தனது முதலீட்டின் பெறுமதியும் அதிகரிக்க வேண்டும் என ஆசைப்படுவார். 

மேற்குறிப்பிட்ட அனைவரது தேவைகளையும் நம்பிக்கைப் பொறுப்ட்சியானது நிவர்த்தி செய்யலாம். அது எவ்வாறு அடைகிறது என்பதை நம்பிக்கைப்பொறுப்பாட்சிகளில் காணப்படும் அலகு நிதியங்களை விளங்கிகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

பிரதானமாக இரண்டு சுட்டிகள் காணப்படுகின்றன அவையாவன. 1. வருமான நிதியங்கள்  2. உரிமை நிதியங்கள்;இவை தொடர்பான விரிவான விளக்கத்தினை அடுத்த வாரம் அறிந்து கொள்ளலாம்.  

-கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .