2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வயோதிப காலத்தை அனுபவிக்க இளமையில் செய்ய வேண்டியவை என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 மே 27 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டில், பெரும்பாலானவர்கள், அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதனால், பெரும்பாலும் ஓய்வூதிய நலன்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்​ைதப் பெற்றுக்கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். 

ஆனால், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள், தமது எதிர்கால நலனுக்காக இளமைக் காலம் முதலே சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 

என்னதான் ஊழியர்களின் ஊதியப் பணத்தில் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு ஒருபகுதி பணம் வழங்கப்பட்டாலும், அவை பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவேதான், காலத்தை கவனத்தில்கொண்டு மேலதிகமாக பின்வரும் காரியங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.   

அவசர கால நிதி

உங்களது மாதச் செலவைப் போல் 3 அல்லது 6 மடங்குப் பணத்​ைதத் முதலில் சேமித்து, வங்கியின் சேமிப்புக் கணக்கில் எப்போது வேண்டுமானாலும் எடுக்கக் கூடியவகையில் வைத்திருங்கள். இது, உங்களை எந்தச் சூழ்நிலையிலும் அவசரத் தேவை சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றும். திருமணம், குழந்தைகள் என்று குடும்பம் விரிவடையும் போது, இந்த அவசரக் கால நிதி​ையப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

எப்போதாவது, அவசரத் தேவைக்கு இந்நிதியை நீங்கள் உபயோகிக்க நேர்ந்தால், அதை மீண்டும் பழைய நிலைக்கு, மிக விரைவாகவே மீள்நிரப்பிக் கொள்ளுங்கள். இதன்மூலமாக, நீங்கள் உங்கள் சேமிப்புப் பணத்துக்கு  எவ்விதமான இடையூறும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக, உங்கள் வயோதிபக் காலத்துக்குத் தேவையான கணிசமானத் தொகையை உங்கள் மேலதிக சேமிப்பின் மூலம் கொண்டிருக்க முடியும்.   

நிதி முதலீடுகளை ஆரம்பியுங்கள்

நிலையான வட்டி வீதங்களை சரியாகக் கண்காணித்து அதை நன்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.மாதா மாதம், தொடர்ந்து உங்கள் சேமிப்பைப் பரவலாக முதலீடு செய்து வாருங்கள். இது உங்கள் நிதி முதலீட்டை பல்வகைமைப்படுத்துவதுடன், பணத்தை இழக்கும் வாய்ப்புகளையும் குறைவடையச் செய்கிறது. குறிப்பாக, பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர அலகு நிதிகளில் நீண்டகாலத்தின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். இது நீண்டகாலத்தில் உங்களிடையே மிகப்பெரும் நிதிச்சொத்து உருவாகக் காரணமாக இருக்கும்.   

உங்களுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமிருப்பின் அல்லது அதை பரீட்ச்சார்த்தமாக முயற்சித்துப் பார்க்க விருப்பமிருப்பின், அதிகபட்சமாக உங்கள் மாதாந்த சேமிப்பில், 5 முதல் 10 சதவீதத்​ைதக் பங்குசந்தையில் முதலீடு செய்து, உங்கள் பங்குச்சந்தை ஸ்திரத்​ைதப் பரிசோதித்துப் பாருங்கள்.

பங்குச்சந்தைையக் கணிப்பது கடினமானதாகும். விசேட த​கமைக் கொண்டவர்கள் பல்வேறு யுக்திகளுடன் பங்குச்சந்தையில் களமிறங்கும் போது, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர் பங்குச்சந்தையின் மாற்றங்களை எதிர்வுகூறுவது கூட கடினமானதாகவே இருக்கும். ஆனாலும், இந்தக் குறுகிய கால முதலீட்டு தவிர்த்து நன்கு திறம்பட செயற்படும், நேர்மையான பெரிய நிறுவனத்தில் நீண்டகால நலனை அடிப்படையாகக்கொண்டு முதலீடு செய்தால், உத்தரவாத வருமானத்ைத நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.   

முதலீடு செய்யுங்கள்

மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதங்களை நிதியை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்களின் வரியில்லா திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.   

இவை, கூட்டு வட்டியின் காரணமாக பன்மடங்கு பெருகி ஓய்வு காலத்தில் எந்தவொரு வரி அறவீடுகளையும் கொண்டிருக்காது மிகப்பெரும் பணத்தொகைக் கிடைக்கக் காரணமாக இருக்கும்.   

வீடு, வாகனம் போன்ற செலவுகளுக்கு முன்கூட்டியே பணம் சேமிக்கத் தொடங்குங்கள். கடன்களை முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.   

 உங்களது வாழ்வின் மிகப்பாரிய செலவுகள், வீடு, வாகனம் ஆகும். வாகனக் கொள்வனவுக்கு, முடிந்தவரை கடன் அல்லது குத்தகை வாங்காமல், பணம் சேர்த்து வாங்குங்கள். வீடொன்றைக் கொள்வனவு செய்யும் மிகப்பெரியதாக விருப்பத்தால், அதை, கடற்று கொள்வனவு செய்வதென்பது மிகமிக சாத்தியப்பாடு குறைந்தவொன்றாக இருக்கிறது.

எனவே, வீட்டைக்  கொள்வனவு செய்யும்போது, அதற்காக செலுத்த வேண்டிய முற்பணத்​ைத   முடிந்தவரை சேமித்து, மிக அதிகளவில் செலுத்த முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக, மீதம் செலுத்த வேண்டிய தொகை குறைவடைவதுடன், அதனால் உங்கள் கடனையும் குறைத்துக் கொள்ள முடியும். இது, உங்களுக்கு சேமிப்பதற்கான போதிய இடைவெளியை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், முதுமை காலத்தில் உங்களுக்கு சொந்தமான வீட்டிலேயே போதுமான நிதியுடன் மிகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும்.   

திறமைகளை வளருங்கள் 

 உங்களது வேலைதான் உங்களது எதிர்காலமும் ஆகும். எனவே உங்கள்வேலை சார்ந்த திறமைகளை முடிந்தவரை இளமைக் காலத்திலேயே வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன்மூலமாக, நீங்கள் மிகஇளமையான காலத்திலேயே மிக அதிகமான உயரங்களைத் தொட முடிவதுடன், வருமான அதிகரிப்பின் மூலமாக சேமிப்பையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.   

பகுதி நேரத்தை வீணடிக்காதீர்கள் 

மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலானோர் பின்பற்றும் வழிமுறையே இதுவாகும். இதன்மூலமாக, பிடித்த தொழிலையும் செய்ய முடிவதுடன், அதன் வருமானத்தில் உங்கள் சேமிப்பையும், வயோதிபகால வாழ்க்கையையும் உறுதி செய்துகொள்ள முடியும்.   

சிக்கனமாக வாழுங்கள் 

இது மிக எளிமையான ஒன்றாகும். ரூபாய் 100,000 ஊதியமாக வாங்கி, ரூபாய் 10,000 சேமிப்பவரை விட, ரூபாய் 60,000 வாங்கி, ரூபாய் 30,000 சேமிப்பவர் சீக்கிரமாக பணக்காரர் ஆகி விடமுடியும். ஆங்கிலத்தில் இதை, Money Saved is Money earned என்று கூறுவார்கள். அதாவது, சேமித்த பணம் சம்பாதித்ததற்கு சமானம். எனவே, எவ்வளவுக்கெவ்வளவு சேமிக்க முடியுமோ, அந்தளவுக்கு சேமிக்கப் பாருங்கள்.   

முதலீட்டுக்குப் பின்னர் செலவு 

முதலீடுதான் எதிர்காலத்துக்கு உதவும். செலவு என்பது தேவை சார்ந்ததாக்க இருக்கும். இந்த நாளாந்த செலவுகளால் நமது எதிர்கால வாழ்க்கை நலனுக்கு தேவையானவற்றினை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, முதலீட்டுக்குப் பின்னே மிஞ்சியதை, தேவை சார்ந்த செலவுகளில் செலவழியுங்கள். செலவுகளிலும் இரண்டு வகை உண்டு. அவை, தேவை, விருப்பம். தேவை சார்ந்த செலவு போக, விருப்பம் அல்லது ஆசை சார்ந்த செலவுகளுக்கு திட்டமிட்டு வரைமுறையிட்டு செலவழியுங்கள்.   

குடும்பத்துக்குக் காப்புறுதி

காப்பீட்டு திட்டமானது, உடல் சார்ந்த அவசர தேவைகளுக்கும், உங்களது எதிர்கால இழப்பினால் உங்கள் குடும்பம் நிலைகுலைந்து போய்விடாமல் இருக்கவும் இந்த நிதி உதவிடும். இது ஒரு தலைக்கவசம் போன்றது. கீழே விழும்போது, அது நம்மைக் காக்கும்.   

மேற்கூறிய வழிமுறைகள் மூலமாக, உங்கள் நிதியியல் செயல்பாடுகளில் மிக ஒழுக்கமான நிதியியல் தன்மையை பேணிக்கொள்ள முடிவதுடன், அதன் மூலமாக எதிர்காலத்துக்கு தேவையான நிதியையும், மிக சுதந்திரமான வயோதிப காலத்தினையும் நாம் உறுதிசெய்துகொள்ள முடியும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .