2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 03.09.2018 -07.09.2018

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

03.09.2018  

டயலொக் அக்ஸியாடா, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 404 மில்லியனாக பதிவாகியிருந்தது. லயன் பிரெவரி மற்றும் ஹற்றன் பிளான்டேஷன்ஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. டயலொக் அக்ஸியாடா மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்ததுடன், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு எம்ரிடி வோல்கர்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

04.09.2018  

AIA இன்சூரன்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி.சு நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 181 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

05.09.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, AIA இன்சூரன்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 365 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு லாஃவ்ஸ் காஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

06.09.2018  

சிலோன் கோல்ட் ஸ்‌டோர்ஸ், சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப்பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 119 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சிலோன் கோல்ட் ஸ்‌டோர்ஸ் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி பங்குகளின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு LOLC ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

07.09.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி.சு நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 274 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டிஸ்டிலரீஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.62% உயர்வையும் மற்றும் S&P SL20 0.38% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 269 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X