2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 08.07.2019 - 12.07.2019

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

08.07.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 136 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் பான் ஏசியன் பவர் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

09.07.2019  

மெல்ஸ்டாகோர்ப், DFCC வங்கி, டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 550 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு த லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோர்பரேஷன், கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், லங்கா ஐஓசி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு பங்கு விற்பனையில் அதிகளவு பதிவாகியிருந்தது.  

10.07.2019  

காசன் கம்பர்பெட்ச், புக்கிட் தாரா, சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள், லங்கா ஐஓசி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

11.07.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், LOLC ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 523 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, மெல்ஸ்டாகோர்ப்,  மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  
12.07.2019  

டயலொக் அக்ஸியாடா, லயன் பிரெவரி மற்றும் த லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோர்பரேஷன் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 364 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மெல்ஸ்டாகோர்ப் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.98% உயர்வையும் S&P SL20 1.26% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 425 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .