2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 14.05.2018 - 18.05.2018

Editorial   / 2018 மே 21 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

14.05.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 924 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. டீஜே லங்கா பங்குகள் மீது புரள்வு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், பிரவுண்ஸ் கெப்பிட்டல் மற்றும் லங்கா ஐஓசி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

15.05.2018  

சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 325 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், HNB அசூரன்ஸ், லயன் பிரெவரி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் அதிகளவு பங்குக் கொள்வனவில் ஈடுபட்டிருந்தார்கள்.  

16.05.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, சொஃவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 455 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் கொமர்ஷல் வங்கி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

17.05.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 484 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் HNB அசூரன்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

18.05.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் வலிபல் வன் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 433 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.20% மற்றும் 0.18% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தன. தினசரி சராசரிப் புரள்வு ரூ. 525 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .