Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 07 , மு.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
30.04.2018
வெசாக் போயா தினத்துக்கு மறுதினம் வர்த்தக, வங்கி, பொது விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
01.05.2018
டயலொக் அக்ஸியாடா, டிஸ்டிலரீஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும், S&P SL20 மறைபெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 517 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. R I L புரொப்பர்டி மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.
02.05.2018
டீஜே லங்கா, ஓவர்சீஸ் ரியால்டி மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 612 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டீஜே லங்கா மற்றும் வலிபல் பவர் எரத்னா மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
03.05.2018
சிலோன் டொபாக்கோ கம்பனி, டயலொக் அக்ஸியாடா மற்றும் ஓவர்சீஸ் ரியால்டி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 463 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
04.05.2018
சிலோன் டொபாக்கோ கம்பனி, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோர்பரேஷன் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 386 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.37% மற்றும் 0.54% சரிவை பதிவு செய்திருந்தன. சராசரி புரள்வு பெறுமதி ரூ. 495 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago