2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

15.10.2018  

ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லயன் பிரெவரி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. சிங்கர் ஸ்ரீ லங்கா மற்றும் காகில்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

16.10.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா, அமானா டகாஃபுல் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

17.10.2018  

ஹற்றன் நஷனல் வங்கி, டயலொக் அக்ஸியாடா மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 448 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, மெல்ஸ்டாகோர்ப், சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் போன்ற பங்குகளின் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

18.10.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 151 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

19.10.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 204 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு எல் பீ ஃபினான்ஸ் மற்றும் டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு 0.93% சரிவையும் S&P SL20 1.01% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 875 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X