2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

25.03.2019  

ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், காகில்ஸ்,  ஸ்ரீ லங்கா ​டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்தன. புரள்வு ரூ. 268 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லயன் பிரெவரி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு லங்கா மில்க் ஃபுட்ஸ், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. மேலும் வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

26.03.2019  

சம்பத் வங்கி, ஸ்ரீ லங்கா டெலிகொம், ஒடெல் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 311 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி, டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

27.03.2019  

மெல்ஸ்டாகோர்ப், பிராக் லங்கா பினான்ஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 165 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ்,  ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்றப் பங்குகளின் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, யூனியன் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

28.03.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி,  கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 457 மில்லியனாக பதிவாகியிருந்தது. 
தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப், கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

29.03.2019  

செலிங்கோ இன்சூரன்ஸ், கொமர்ஷல் வங்கி,  செலான் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 326 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு எயிட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. 
கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.31% உயர்வையும் S&P SL20 0.51% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 306 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. சராசரி புரள்வுப் பெறுமதி 2016 பெப்ரவரி மாதத்தைத் தொடர்ந்து பதிவாகியிருந்த மிகவும் உயர்ந்த இழப்பு இதுவாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .