2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

22.07.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், காசன் கம்பர்பட்ச்,  நெஸ்லே லங்கா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 209 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, நெஸ்லே லங்கா, டீஜே லங்கா, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

23.07.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 339 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங், மல்வத்த வெலி பிளான்டேஷன்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

24.07.2019  

சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.1 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, மெல்ஸ்டாகோர்ப், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், லாஃவ்ஸ் காஸ்,  அமானா டகாஃபுல் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.   

25.07.2019  

கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, DFCC வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 743 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி, எயிட்கன் ஸ்பென்ஸ், சம்பத் வங்கி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

26.07.2019  

கொமர்ஷல் வங்கி, கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.24 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, டயலொக் அக்ஸியாடா,  ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், சம்பத் வங்கி,  டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு 0.30% உயர்வையும் S&P SL20 0.78% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.4 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .