2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 16.07.2018 - 20.07.2018

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

16.07.2018  

காகில்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறை பெறுமதியைப் பதிவு செய்திருந்தது. S&P SL20 நேர் பெறுமதியைப் பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது, கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

17.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 454 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டீஜே லங்கா, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

18.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 543 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் பிளான்டேஷன்ஸ் மற்றும் அமானா டகாஃபுல் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

19.07.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் நெஸ்லே லங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 634 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, மெல்ஸ்டாகோர்ப் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் செலான் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர். 

20.07.2018  

செலிங்கோ இன்சூரன்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் ஜெட்விங் சிம்பனி லிமிட்டெட் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 207 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ரெக்னிஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன, 0.86% மற்றும் 1.97% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரித் தினசரி புரள்வு 429 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .