2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 18.06.2018 - 22.06.2018

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

18.06.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.2 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா வோல் டைல்ஸ் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

  
19.06.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 638 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சென்ரல் இன்டஸ்ரீஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.

20.06.2018  

டிஸ்டிலரீஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளை் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 341 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது, தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு பதிவாகியிருந்தது. டீஜே லங்கா பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

21.06.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 416 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் பிரமல் கிளாஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகம் ஈடுபட்டனர்.   

22.06.2018  

டயலொக் அக்ஸியாடா, சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 277 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் பிரமல் கிளாஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில், அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன 1.63% மற்றும் 2.80% சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 593 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X