2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தமிழில் பர்பி

Editorial   / 2017 ஜூலை 31 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், காஜோல், சமுத்திரகனி நடித்துள்ள திரைப்படம் விஐபி-2. ஓகஸ்ட் 11ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில், இத்திரைப்படம் வெளியாகிறது.

ஹந்தியில், ராஞ்சனா, ஷமிதாப் திரைப்படங்களில் நடித்து ஹந்தி ரசிகர்களுக்கு தனுஷ் ஏற்கெனவே பரிட்சயமாகி விட்ட தோடு, பிரபல ஹிந்தி நடிகை காஜோலும் இந்தத் திரைபடத்தில் நடித்திருப்பதால், ஹிந்தியில், விஐபி-2 மிகப்பெரிய அளவில், ரிச்சாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்தத் திரைப்படத்தையடுத்து, பர்பி என்ற, ஹிந்தி திரைப்படத்தை தமிழில் ரிமேக் செய்யப் போகிறாராம் தனுஷ். விஐபி-2 திரைப்படத்தின் ஹிந்தி பிரமோஷனுக்காக, மும்பை சென்றபோது, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் தனுஷ். பர்பி ஹிந்தி திரைப்படத்தில், ரன்பீர் கபூர்-பிரியங்கா சோப்ரா நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பை, தனுஷ், விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X