2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தெலுங்கு ரீ​மேக்கில் விஷால்

Editorial   / 2018 மே 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரும்புத்திரை வெற்றியால், உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஷால், தற்போது, சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள், மதுரையில் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்குப் பின்னர், தெலுங்கில் வெளியான “டெம்பர்” படத்தின் ரீமேக்கில், விஷால் நடிக்கவிருப்பதாகவும் அத்திரைப்படத்தையும், விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கவுள்ளதாகவும், போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றிபெற்ற டெம்பர் திரைப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ், கோவை சரளா, தணிகல பரணி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

மணிசர்மா இசை அமைத்திருந்தார், அனூப் ரூபன் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார், பூரி ஜெகன்னாத் இயக்கி இருந்தார். சாமி படத்தின் சாயல் கொண்ட இக்கதையில், மோசமான பொலிஸ் அதிகாரியொருவர், தனது காதலிக்காக நல்ல பொலிஸ் அதிகாரியாக மாறும் வகையில் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .