2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்

J.A. George   / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடியுரிமை பெற்றவர். ஜெர்மனியின் நாட்டின் சுகாதாரத்துறையில் விட்ஜா பணி புரிந்து வருகிறார். 

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70 ,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. 

தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதாக நடிகர் ஆர்யா மீது விட்ஜா ,பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு  இணைய வழியாக புகார் அளித்துள்ளார். 

தனக்கும் நடிகர் ஆர்யாவின் தயாருக்கு நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்காக ஆதாரங்களையும்  தன் புகாரில் அவர் இணைத்துள்ளார். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து விட்ஜா கூறுகையில், '' நான் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் பணி புரிகிறேன். கொரோனா லாக்டவுன் காரணமாக தனக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார். 

மேலும், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றார். பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெற்றார். சில மாதங்கள் கழித்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது எனக்கு தெரிந்தது. 

இதைத் தொடர்ந்து, நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது, ஆர்யாவின் தாயார் என்னை மோசமாக திட்டினார். '' என்று கூறியுள்ளார்.

முன்னதாக , 'எங்க வீட்டு மாப்பிள்ளை 'என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். அதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். 

அப்போது, இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கு மனைவியை தேர்வு செய்யாத நடிகர் ஆர்யா, நடிகை ஷாயிஷாவை திருமண செய்து கொண்டார்.

இந்திய ஊடகங்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .