2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பத்மாவதி’க்கு சிக்கல்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்துக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திரைப்படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்தப் போராட்டங்கள் காரணமாக, பத்மாவதி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) உத்தர பிரதேசத்தில், போராட்டம் ஒன்றை நடத்தியது. அப்போது, தீபிகாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன், தீபிகா மற்றும் பன்சாலி ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று, பத்மாவதி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி, மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இது குறித்து, மகாசபாவின் இளைஞர் அணித் தலைவர் புவனேஸ்வர் சிங் கூறியுள்ளதாவது, “உயிருடன் எரித்தால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா உணர வேண்டும். ராணி பத்மினி செய்த தியாகம் அவருக்கு ஒருபோதும் புரியாது. தீபிகாவை உயிருடன் எரிக்கும் நபருக்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் பரிசளிக்கப்படும். இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு, எங்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும்” என்றார்.

பத்மாவதி திரைப்படம், ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில், ராணியை அவமதித்து வரலாற்றை திரிபுபடுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக தீபிகாவின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு, 50 மில்லியன் இந்திய ரூபாய்கள் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மும்பை பொலிஸார், தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு, சிறப்பு பாதுகாப்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X