2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி

Editorial   / 2019 ஜூலை 08 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009இல் மத்தியில் மன்மோகன் ஆட்சியும் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியும் இருந்தபோது ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய தேசத்துரோக குற்றத்திற்காகவும் வைகோ மீது அப்போதைய திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் ஓராண்டு சிறைதண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக வைகோ தேர்வு செய்யப்பட இருந்த இந்த நேரத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், 2009 ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மீது தேசத்துரோக வழக்குப்போட்டது யார்? அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தர்மதேவதை மறக்கவில்லை. எண்ணெய் தடவிக்கிட்டு மண்ணுல புரண்டாலும் ஒட்டுறதுதான்ஒட்டும் - பழமொழி எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும்- புதுமொழி டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிடுச்சே திமுகழகம். எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சிருச்சே -என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. அவரது இந்த பதிவிற்கும் வழக்கம்போல எதிர்கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .