Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”.
அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக செய்திகள் வெளியானபோதும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.
“விஸ்வாசம்” திரைப்படம், குடும்பப் பாங்கான கதையில் உருவாகிறது. இருப்பினும், இத்திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து, இன்னமும் முடிவாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்தத் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகைகளும் நாயகி பட்டியலில் இருக்கிறார்களாம். ஆனாலும், கீர்த்தி சுரேஷுக்குத்தான் முதலிடம் என, படக்குழு வட்டாரத்தில் பேசிப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .