2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அதிகம் வசூலித்த முதல் இந்திய திரைப்படம்

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த “தங்கல்”, உலக அளவில் இந்திய ரூ.2000 கோடி வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ஏற்கெனவே வசூலை குவித்த நிலையில், அண்மையில் சீனா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் வெளியாகி அந்நாட்டு இரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திரைப்படத்தின் மொத்த வசூல் இந்திய ரூ.2000 கோடியை தாண்டியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் இந்திய ரூ.70 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை அறிந்த சீன அரசாங்கம், இந்தத் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து பெருமைப்படுத்தியது.

ஆங்கிலத் திரைப்படங்களை தவிர்த்து,  உலக அளவில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தை 'தங்கல்' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏற்கெனவே இந்திய ரூ.1600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள “பாகுபலி 2” திரைப்படம் விரைவில் சீனா, மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளது.

எனவே “தங்கல்” வசூல் சாதனையை முறியடித்து இந்திய ரூ.2000 கோடி வசூல் செய்யும் இரண்டாவது திரைப்படமாக “பாகுபலி 2” அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .