2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆட தெரியாதவ.. தெரு கோணல்ன்னாளாம்.. மீரா மிதுனுக்கு கஸ்தூரி பதிலடி!

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் நெபோடிசம் இருப்பதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது வீடியோவின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை மீரா மிதுன், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நெபோடிசம் இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

தொடர்ந்து டிவிட் பதிவிட்டும் வீடியோ வெளியிட்டும் வருகிறார் மீரா மிதுன். மீராவின் வீடியோவால் கடுப்பான ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, மீரா மிதுனுக்கு விடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

கஸ்தூரி தனது யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் சினிமாவில் நெபோடிசமே இல்லை என பாயிண்ட் பாயிண்ட்டாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் நெபோடிசம் இல்லவே இல்லை என அடித்து பேசியுள்ளார். 

என்னதான் சினிமா ஜாம்பவான்களின் வாரிசுகள் என்றாலும் திறமை இருந்தால்தான் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தமிழ் சினிமாவில் நெபோடிசம் இருக்கு குரூப்பீசம் இருக்கு என்று கூறி வருகிறார். நடிப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதவங்க அப்பாவ வச்சு முன்னுக்கு வந்துருக்காங்க என ஆபாண்டமா குற்றச்சாட்டு வச்சுருக்காங்க.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மக்களுடைய ஆதரவு இல்லாமல் யாரும் முன்னுக்கு வர முடியாது. திறமையுள்ளவங்கள புரோமோட் பண்றது நெபோடிசம் இல்ல. நமக்கு வேண்டியவர்கள் என்பதற்காக லாயக்கே இல்லாதவர்களை தூக்கி விடுவது புரோமோட் பண்ணுவதுதான் நெபோட்டிசம்.

அப்படி யார் தமிழ் இன்டஸ்ட்ரியில் முன்னுக்கு வர முடியுது. மேலிடத்து சிபாரிசு என்று யாரும் முன்னுக்கு வர முடியாது. அரசியலில் அது இருக்கலாம், கம்பெனிஸ்ல இருக்கலாம், படிப்புல கூட இருக்கலாம். சினிமாவுல மக்களோட ஆதரவு இருந்தா மட்டும்தான் முன்னுக்கு வர முடியும். மக்கள் நினைச்சா மட்டும்தான் தமிழ் இன்டஸ்ட்ரியில பேர் வாங்க முடியும்.

இங்கே பேர் வாங்கனும்னா, எக்கச்சக்க திறமை வேணும் நிறைய பொறுமை வேணும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேணும். திறமையில்லாம இருந்தா முதல்ல லாஞ்ச் படம் கொடுக்கலாம். அது சரியாக போகலன்னா அடுத்தப் படம் அப்பாவே கொடுக்கமாட்டாரு. யாரும் இன்வெஸ் பண்ண மாட்டாங்க.

சினிமா பின்னணியில் இருந்து வரவுங்க எந்த அளவுக்கு ஜெயிக்கிறாங்க அப்படிங்கிறது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சினிமா பின்னணியில் இருந்து வரவுங்களுக்கு தோல்வியை தாங்கிக்கொள்ள வேண்டி உறுதியும் தேவை. வாரிசுகளின் படங்கள் சரியாக போகாவிட்டால், அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு பிள்ளையா என கேட்டு விடுவார்கள்.

சிவாஜியின் நிழலில் இருந்து வெளியே வர்றதுக்கு பிரபுவுக்கு அத்தனை நாட்கள் ஆனது. அவரே என்னிடம் கூறியிருக்கிறார். சினிமா பிரபலங்களின் வாரிசு என்பது வரம் அல்ல. அது ஒரு சவால். இளையராஜாவுக்காக யாரும் அவரது மகனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, அவரை மீறி யுவனால் இசையமைத்துவிட முடியுமா? என்ற கேள்விதான் வரும்.

நெபோடிசம் இருக்கு என்றால் விஜயக்குமார் சார் குடும்பத்தில் இருந்தவர்கள் தான் இன்று டாப் ஹீரோ ஹீரோயினாக இருக்க வேண்டும். அருண்விஜய்க்கு இல்லாத திறமையா? இன்னும் அவர் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 

ஹிட் இயக்குநர் ஹரி, தங்கள் வீட்டு பிள்ளையான அருண் விஜயை வைத்து படம் எடுத்திருக்கலாமே? ஏன் சிவகுமார் சார் விட்டு பிள்ளையை வைத்து படம் எடுக்கிறார்.

அப்பா அம்மாவை பார்த்து தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனாலதான் லாயர் பிள்ளைகள் லாயர் ஆவதும், டாக்டர் பிள்ளைகள் டாக்டர் ஆவதும், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலாவதும் சினிமாக்காரர்களின் பிள்ளைகள் சினிமாவில் நடிப்பதும் இயற்கையானது. 
ஜெயம் ரவியின் அப்பா மோகன் சார் ஒரு பிரபல எடிட்டர். ஒரு முறை ரவி கூறியிருக்கிறார், எல்லோரும் பொம்மை வைத்து விளையாடும் போது நான் கத்தரிக்கோளும் பிலிம் ரோலும் வைத்து விளையாடினேன், எனக்கு சினிமாதான் தெரியும் என்றார்.

வந்த புதுசுல அவரும் பல விமர்சனத்துக்கு ஆளானார். ஜெயம் ரவியும் எத்தனையோ படங்களில் நடித்தபிறகுதான் அவரை ஒரு நட்சத்திரமாக ஒப்புக்கொண்டார்கள். திறமையும் போராட்டமும் இல்லாமல் யாருமே இங்கே வெற்றி பெற முடியாது. பல வாரிசுகள் வாய்ப்பே இல்லாமல் உட்காந்திருக்கிறார்கள்.

பணம் இருக்குறவங்க தங்களை ஹீரோவாக்கி படம் எடுக்குறாங்க. ஜேகே ரித்திஷ், பவர் ஸ்டார், ராஜ்கிரண் ஆகியோர் அப்படிதான் படம் எடுத்தார்கள். பல்லு உள்ளவன் பக்கோடா சாப்பிடுறாங்க. பல நடிகர்களின் மகன்கள் நடித்த முதல் படம் அவ்ரேஜ்ஜாக போனதால் இன்னும் சோபிக்க முடியவில்லை.

பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி, பாக்கியராஜ் மகன், மகள், கவுதம் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார். நடிகை ராதாவின் மகள்கள் என பலரும் வாரிசுகளாக இருந்து தங்களை இன்னும் நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் உள்ளனர். 

கீர்த்தி சுரேஷுக்கு மகாநடி கிடைச்சது அவங்க அதிர்ஷ்டம். அந்த மாதிரி அதிர்ஷ்டமும் வேணும். ஸ்ருதி ஹாசனுக்கு இல்லாத திறமையா? பாடுறாங்க, நல்லா ஆடுறாங்க, கவர்ச்சி காட்றாங்க ஆனாலும் தமிழ் சினிமாவுல அவங்களால ஒரு இடத்தை பிடிக்க முடியல.

முன்னுக்கு வர்றவங்க எல்லாரையும் வாரிசா இருந்து வந்த, ரெக்கமண்டேஷன்ல வந்த, அட்ஜெஸ் பண்ணி வந்த, அப்படின்னு சொல்லி கொச்சைப்படுத்தாதீங்க. தமிழ் சினிமாவ பொறுத்தவரைக்கும் திறமை இருந்தாதான் ஜெயிக்க முடியும். 

ஆடத் தெரியாதவ.. தெரு கோணல்ன்னாளாம் .. மத்தவங்க மேல குற்றம் சுமத்துறது, குறை சொல்றதெல்லாம், பொறாமை பிடிச்சவங்க,திறமையில்லாதவங்க, திறமை மேல நம்பிக்கையில்லாதவங்க செய்ற செயல்.. இவ்வாறு பேசியிருக்கிறார் கஸ்தூரி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X