2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தீபாவளி சிறப்பு காட்சி இல்லை; திகிலில் பிகில் ரசிகர்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‛பிகில்' படமும், கார்த்தி நடித்துள்ள ‛கைதி' படமும் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் விஜய்யின் பிகில் படம் ஓராண்டுக்கு பின்னர் வெளியாவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

ஆனால் இம்முறை இரண்டு படங்களுக்கும் சிறப்பு காட்சி அனுமதி அளிக்கவில்லை.

இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், “தீபாவளியை ஒட்டி எந்த படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கவில்லை. அதை மீறி திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

சில திரையரங்குகளில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அப்படி விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு காட்சி தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்று(22) மாலை தான் சென்னை வருகிறேன். அதன்பிறகு தான் முடிவெடுக்கப்படும் என்றார்.

பல ஊர்களில் அதிகாலை காட்சிக்கு முன்பதிவு நடந்துள்ளது. மேலும் டிக்கெட்டும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

ஒருவேளை சிறப்பு காட்சி அனுமதி அளிக்காவிட்டால் அவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதிலும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிகில் ரசிகர்கள் திகிலில் உள்ளனர்.

அனுமதி கிடைக்கும்

திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், “பண்டிகை காலங்களில் இது போன்று சிறப்பு காட்சிகள் நடப்பது வழக்கமான ஒன்று தான். 

பொங்கலுக்கு கூட சிறப்பு காட்சி திரையிட்டோம். அரசாங்காத்திடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். அமைச்சரையும் இன்று(22) மாலை சந்தித்து பேச இருக்கிறோம். நிச்சயம் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .