2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரியங்கா ஆவேசம்

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் ஒரு கருப்பின இளைஞர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் மிதித்து கொல்லப்பட்டார். இந்த வீடியோ உலகின் மனசாட்சியை உலுக்கியது.

அமெரிக்காவில் நிலவும் நிறவெறி குறித்து அமெரிக்கர்களே கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு எதிராக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவில் வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா கூறுகையில், “இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன.

அறிவாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் பலரும் இந்த விவகாரத்தில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நிற வெறி காரணமாக இனி ஒரு உயிரும் போகக் கூடாது.

கழுத்து நெரிக்கப்பட்டு ஒருவர் துடி துடிக்க இறந்தபோது, அதை தடுக்காமல் அருகில் நின்று வேடிக்கை பார்த்த பொலிஸார் உள்பட அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை போராட்டம் நிற்கக் கூடாது. என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .