2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இசைஞானி

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் வெளியிட்ட இசைஞானி இளையராஜா மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் கிறிஸ்தவ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இளையராஜா "இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள்", என ஆவணப்படத்தை மேற்கொள்காட்டினார். மேலும், "உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு நிகழ்ந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் விமர்சித்துப் பேசிய இளையராஜாவுக்கு எதிராக தமிழகத்தின் சில கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளதோடு, பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

"இசையமைப்பாளர் இளையராஜா இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் கிறிஸ்தவர்களாகிய எங்கள் மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் கொந்தளிப்பும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது." என கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X