2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மௌனப் போராட்டம் குறித்து நாசர் விளக்கம்

Editorial   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மௌனத்தை கடைப்பிடித்தது ஏன்? என நடிகர் நாசர் விளக்கமளித்துள்ளார்.

காவிரி முகாமைத்துவ சபையை அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழ்த் திரையுலகினர் சார்பில் அடையாள கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கருத்து வெளியிடுகையில்,  “இந்தப் போராட்டத்தை துறை சார்ந்த அறிஞர்கள், தொடர்புடைய வல்லுனர்களை எல்லாம் அழைத்து வந்து ஒருநாள் முழுக்க மக்களுக்கான தேவை, தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், அது ஈடேறவில்லை. இந்தக் குறுகிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்தச் சிறிய இடத்தில் நடத்தும் இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் எல்லைகள் வகுத்த பிறகு, நீருக்கான இந்தப் பிரச்சினை பெரிதாக இருந்து வருகிறது. இறைவனுக்கு இணையான விடயம்தான் தண்ணீர். எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் வருமென்றால், அது தண்ணீருக்காகத்தான் வரும் என்கிறார்கள், வல்லுனர்கள்.

மக்களின் பிரச்சினைகளுக்கும் முக்கியத் தீர்வுகள் காணப்பட வேண்டும். இந்த விடயத்தில், மக்களின் உரிமைக்குரலுக்கு மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்று கருதுகிறவர்களே பாதிக்கப்பட உள்ளோம் என்பதைப் புரிந்து போராட்டம் செய்யும்போது, அதற்குத் தீர்வுகாண வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .